
Ph.D. Tamil
Literature
Culture
Tamil Studies
ABOUT THE DEPARTMENT
The Research Department of Tamil offers a doctoral program devoted to Sangam literature, ancient Tamil epics, grammar, folk literature, epigraphy, and modern Tamil prose and poetry. Scholars conduct deep research on Tamil heritage, culture, and literary innovations.
Our Vision
To preserve, enrich, and research the vast richness of Tamil literature and heritage.
Our Mission
- Promote high-quality research in ancient and modern Tamil literary works.
- Conduct field studies on regional folklore, epigraphy, and cultural history.
- Encourage academic publishing in national Tamil research journals.
DEPARTMENT OUTCOMES
நுட்பமான சிந்தனை
நமது சிந்தனையையும், செயல்களையும் வடிவமைக்கும் கருத்தாக்கங்களை அடையாளம் கண்டபின் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். இக்கருத்தாக்கங்கள் எந்த அளவிற்குத் துல்லியமானவை என்பதைச் சரிபார்த்து, தங்களது யோசனைகளையும் முடிவுகளையும் (அறிவுசார், நிறுவன மற்றும் தனிப்பட்ட) வெவ்வேறு கோணங்களிலிருந்து பார்த்து அறிவர்.
பயனுள்ள தகவல் தொடர்பு
தனி நபராக தெளிவாகப் பேசவும் படிக்கவும் எழுதவும் மற்றும் கேட்கவும் அறிந்துகொள்வர். மின்னனு ஊடகங்கள் வாயிலாக ஆங்கிலம் மற்றும் இதர இந்திய மொழியை அறிவதால் பல நூல்கள், கருத்துகள், ஊடகம் மற்றும் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதோடு உலகியலைத் தொடர்புகொள்ளவும் அறிவர்.
சமூகத்தொடர்பு
பிறருடைய கருத்துகளையும் எண்ணங்களையும் வெளிக்கொண்டு வருவதோடு கருத்து வேறுபாடுகளை பொது முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் குழு அமைப்புகள் மூலம் கருத்துகளை முடிவுக்குக் கொண்டு வருதல்.
பயனுள்ள குடியுரிமை
சமூக நலத்தில் அக்கறை கொண்டு பரவலான சமத்துவ தேசிய வளர்ச்சி மற்றும் தேசியப் பிரச்சினைகளில் பங்கு பெறும் திறனைப்பெறுதல். பொதுத்தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நாட்டு நலனுக்காக செயல்படுதல்.
நெறிமுறைகள்
பல்வேறு சமூக நெறிமுறைகளை உணர்ந்து அவற்றின் வழி நடப்பதற்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்குமான திறன் பெறுவர்.
சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை
சுற்றுச்சூழல் மற்றும் அதன் நிலையான வளர்ச்சியின் சிக்கல்களைப் புரிதல்.
சுயமாக வாழ்நாள் முழுவதும் கற்றல்
பரந்த சூழலில் ஏற்பட்டுள்ள சமூக தொழில் நுட்ப மாற்றங்களை சுதந்திரமாக வாழ்நாள் முழுவதும் கற்கும் திறன் பெறுதல்.
